தொடர்ந்தும் மழை பொழிந்தால் கடும் ஆபத்தை எதிர்கொள்ளும் தள்ளப்படும் நிலைக்கு – அவதானிகள் எச்சரிக்கை!

யாழ்குடாநாட்டில் தற்பொழுது இடைவிடாது கடும் மழை பொழிந்துவருவதனால் மிகப்பெரிய அவல நிலை உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
வங்களா விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பின்னர் புயலாக மாறி இலங்கையினை ஊடறுத்திருந்தது. புரவி என பெயர்சூட்டப்பட்ட அந்த புயல் வடக்கு தமிழர் பகுதிகளில் கனதியான மழையினை கொடுத்து மன்னார் விரிகுடாவில் தாழமுக்கமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் கடும் மழை பொழிந்து வருகின்றது. இந்த மழைப்பொழிவு எதிர்வரும் புதன்கிழமை வரை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மாநகரப் பகுதிஈ தென்மராட்சி வடமராட்சி தீவகம் வலிகாமம் உள்ளிட்ட பிரதேசங்களின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே மேலும் மழைவீழ்ச்சி நீடிக்குமாயின் மிகப்பெரிய அவசர நிலைமை தோன்றும் என புவியியலாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|