தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, November 25th, 2021

நாட்டின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வுபு் பகுதியாக உருவாகி தற்போது இலங்கையின் கிழக்கில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஏனைய இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், ஏனைய இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை யால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத் துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நிலையத்தின் அறிக்கையின்படி, நேற்றுக் காலைமுதல் பெய்த கனமழை மற்றும் வேகமான காற்றால் காரைநகரில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரு குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 000

Related posts: