தொடர்ந்தும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, July 19th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 420 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில், ஆயிரத்து 402 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 84 ஆயிரத்த 932 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 523 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 56 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 நோயால் மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 நோயால் மரணித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts: