தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – இலங்கையிடம் அமெரிக்கா உறுதி!

Thursday, March 7th, 2019

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளினதும், ஜெனிவா தீர்மானித்தினதும், முழுமையான அமுலாக்கத்திற்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் கடப்பாட்டையும் அமெரிக்கா கொண்டுள்ளது.

இதற்கமைய, நீண்டகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலிய...
இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியே...
யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப...