தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 825 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் ஆயிரத்து 801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 24 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 172 பேர் குணமடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 43 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: