தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இரு பிரதான கட்சிகள்

Friday, April 7th, 2017

ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அடுத்த மாகாணசபைத் தேர்தலை தனித் தனியே சந்தித்தாலும், அவர்கள் ஒன்று சேர்ந்தே ஆட்சியமைப்பார்கள் என்று அண்மையில் மீரிகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

கடந்த ஜனாதபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் ஒன்றுசேர்ந்து ஆட்சியமைத்த உதாரணங்களைப் பின்பற்றி ஜனாதிபதியும், பிரதமரும் இம்முறைமையை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் நாட்டின் ஆட்சிக்காக நீண்டகாலம் இணைந்திருந்தால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பாக அமைந்துவிடக் கூடும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் திஸ்ஸநாயக்க பிறிதொரு கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நீண்டகால ஆட்சியானது மக்கள் மாற்றுவழியொன்றைத் தேடுவதற்கு வழிசெய்து விடக்கூடும் என்றும் அவை பெரும்பாலான நேரங்களில் கடும்போக்குவாதிகள் மற்றும் இனவாதிகளின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: