தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Sunday, April 23rd, 2017
இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று மேலும் பரவுவதால் மக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்
கடந்த நாட்களில் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று நாட்டின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. இந்தத் தொற்று இருப்பவர்கள், அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களை சந்தித்ததன் பின்னர், பொதுமக்கள் தமது கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவாமல், மூக்கையோ, கண்களையோ அல்லது முகத்தையோ தொடக்கூடாது என அவர் கூறியுள்ளார். மேலும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளிலுக்குச் செல்வதை தவிர்ப்பதன் மூலம் இந்தத் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
சாதாரண தரப் பரீட்சைக்காக வடக்கில் இலவசக் கருத்தரங்குகள்!
நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!
|
|