தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்காள்ள சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்துவது அவசியம் – வாடிக்கையாளரிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி கோரிக்கை!

நீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ச்சியான நீர் விநியோகத்துக்கு சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி திலின எஸ். விஜேதுங்க கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், நிலவும் சூழ்நிலை காரணமாக நுகர்வோர் நீர் கட்டணத்தைச் செலுத்துவதில் தாமதம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில் பட்டியல் கட்டணத்தை எளிதாகச் செலுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியல்களை கைத்தொலைபேசி நிறுவனங்கள், இணையத்தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வங்கிச் சேவைகள் மூலமாகவும் செலுத்தலாம்.
மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் நீர் வழங்கல் சபையின் அலுவலகங்களுக்குச் சென்று காசாக அல்லது காசோலை அல்லது அட்டை மூலம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி மேலதிக விபரங்களுக்கு 011 2 623 623 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
|
|