தொடர்கிறது தபால் ஊழியர்களின் போராட்டம்!

Thursday, July 18th, 2019

பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் அமைச்சருடன் நேற்று(17) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமது கோரிக்கைக்கான உரிய தீர்வு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம்(16) மாலை 04 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(18) மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: