தொடரும் மனித அவலம்: இத்தாலியில் 24 மணித்தியாலங்களில் 889 பேர் உயிரிழப்பு!

Sunday, March 29th, 2020

24 மணித்தியாலங்களில் இத்தாலியில் கொரோனா வைரஸால் 889 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 542 மரணங்கள் லம்பாடி எனும் நகரத்தில் இருந்து மாத்திரம் பதிவாகியுள்ளது.

மொத்தமாக 92,472 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு மொத்தமாக 10,023 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 51 வைத்தியர்களும் உள்ளடங்குவர்.

இத்தாலியில் கொரோனா வைரஸின் தாண்டவத்தால் கடந்த

22 ஆம் திகதி – 651 மரணங்களும்

23 ஆம் திகதி – 602 மரணங்களும்

24 ஆம் திகதி – 743 மரணங்களும்

25 ஆம் திகதி – 683 மரணங்களும்

26 ஆம் திகதி – 662 மரணங்களும்

27 ஆம் திகதி – 919 மரணங்களும்

28 ஆம் திகதி – 889 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: