தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல் : யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சம்!

Tuesday, February 12th, 2019

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.

வீட்டின் கேற் பூட்டப்பட்டிருந்த போதும், மதிலால் வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்து உள்சென்ற குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என மக்கள் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.


காலத்தின் பதிவுகளை பாதுகாக்கும் வகையில் படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பனம்!
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!
காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்...
திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவ...