தொடரும் பணிப்புறக்கணிப்பால்  ரயில் பயணங்கள் ஆபத்தில்!

Monday, December 11th, 2017

தொடரும் பணிப்புறக்கணிப்பால்  ரயில் பயணங்கள் ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ரயில் வீதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு 4 நாட்களுக்கு மேல் கடந்துள்ளமையினால் இதுவரையில் ரயில் வீதியில் எவ்விதமான பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் காரணமாக ரயில் பயணங்களுக்கு ஆபத்து ஏற்படும் என ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் துமிந்த தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts: