தொடரும் சீரற்ற வானிலை – பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Wednesday, November 10th, 2021

நாட்டில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களை தடுத்திருக்கலாம். ஆனால் எச்சரிக்கையையும்மீறி வெள்ளத்தை பார்வையிட சென்றமை, நீர்நிலைகளில் நீந்தியமை உள்ளிட்ட காரணங்களாலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். பெருந்தொற்று, சீரற்ற காலநிலையின்போது சுற்றுலா பயணங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அதிகாரிகளால் விடுக்கப்படும் அறிவுரைகளை உரிய வகையில் பின்பற்றுங்கள். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: