இலங்கையில் இன்றும் நால்வர் இனங்காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் குறித்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று தொற்றுக்குள்ளாகியவர்களில் மூவர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுடன் மூவரும் பெண்களென்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்று கொரோனா பாதிப்புக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று மேலும் நால்வர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 158 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|