தொடரும் கனமழை – நீரில் மூழ்கும் முல்லைத்தீவு கிராமங்கள் – மக்கள் பெரும் அவலம்!

Monday, December 7th, 2020

புரெவி புயலின் காரணமாக அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அதிக அசௌகரியங்களையும் எதிர்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபட்ச மாக 402 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பாதிவாகியதோடு சுமார் 700க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல பகுதிகளில் கனமழை பொழிந்துவருகின்றது.

இதன் காரணமாக மாங்குளம்- துணுக்காய் வீதியில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும், பனிக்கன்குளம் கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: