தொடருந்து விபத்துக்களை குறைப்பதற்கான தெளிவூட்டல்!

Monday, March 12th, 2018

தொடருந்து விபத்துக்களை குறைப்பதற்காக தொடருந்து கடவைகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு தெளிவூட்டல் மற்றும் பாதாகைகளை பொருத்தும் நடவடிக்கை இன்றுஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நாவிந்த தொடருந்து கடவைக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்து விபத்துக்களில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கடந்த வருடம் இடம்பெற்ற தொடருந்து விபத்துக்களில் 955 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: