தொடருந்து வழித்தடம் தொடர்பில் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானம் !

Sunday, March 3rd, 2019

தொடருந்து வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பில் தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தொடருந்து வழித்தடத்தில் பயணிப்பதன் காரணமாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேரளயில் மரணிக்கின்றனர். இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மாத்திரம், 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், குறித்த விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொடருந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தொடருந்து வழித்தடத்தில் பயணித்தல் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்தியவாறு பயணித்தல் என்பனவே இந்த விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

புதிய இயந்திர தொடருந்துகள் பாரியளவு சத்தமின்றி பயணிக்கின்றன. எனவே, தொடருந்து வழித்தடத்தில் பயணிக்கும் தொடருந்துகள் குறித்து அதிகளவு அவதானம் ஏற்படாது.

இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தொடருந்து விபத்துக்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதற்கமைய, தொடருந்து வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தொடருந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: