தொடருந்து போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் – இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க!

தொடருந்து போக்குவரத்துக்காக ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பெற்று கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து போக்குவரத்தை சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையாக மாற்றும் நோக்கிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சேவை முகாமைத்துவத்திற்காக, தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்று, கையெழுத்து மூலம் ஆவணப்படுத்தும் முறைமையே சில பகுதிகளில் உள்ளது.
இந்த நிலையில், சில பகுதிகளுக்கு ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை வழங்கி, அதனூடாக கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் - அரசாங்கம் அறிவிப்பு!
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதனூடாக அரசின் பலம் மேலும் வலுவடையும் – பிரதமர் மகிந்த நம்பிக...
5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்கள் வெளியிட வாய்ப்பு - பரீட்சை திணைக்...
|
|