தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!

Thursday, July 14th, 2022

 

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் குறித்த ஊரடங்கு சட்டம் நேற்று மதியம் 12 மணி முதல் அமுலாக்கப்பட்டிருந்தது.

பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்ற அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நேற்றையதினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: