தொடருந்து தொழிற் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்!

Sunday, April 7th, 2019

எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளின் அடிப்படையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ள உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: