தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்பு!

நடமாட்டத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொடருந்து சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி காலை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|