தொடருந்துகளில் யாசகம் எடுக்கத்தடை – போக்குவரத்துப் பிரதியமைச்சர்!

Saturday, June 16th, 2018

தொடருந்துகளில் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து யாசகம் எடுப்பதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஏனைய பயணிகளும் தொடருந்தில் யாசகம் எடுக்க வருபவர்களால் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாசகம் எடுப்பவர்களில் சிலர் பயணிகளின் பொருள்களைத் திருடுவதாகவும் கூறப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் திருடர்கள் கூட யாசகம் எடுப்போர் என்ற போர்வையில் பெறுமதி மிக்க பொருள்களைத் திருடுவதாகவும் எடுப்பதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இவற்றைக் கருத்திற்கொண்டே தொடருந்துகளில் யாசகம் எடுப்பதைத் தடை செய்;ய முடிவு எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: