தொடருந்தில் மரக்கறிகள் – பழங்களை – விரிவான அறிக்கை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்பு!

Thursday, January 26th, 2023

தொடருந்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில், தொடரூந்து திணைக்களம் ஹாலிஎல, ஒஹிய, அம்பேவெல, பட்டிபொல மற்றும் நானுஓயா போன்ற தொடரூந்து நிலையங்களை மையமாகக் கொண்டு, பல விசேட தொடரூந்து  பெட்டிகளைப் பயன்படுத்தி பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட 5 தொடரூந்து பெட்டிகள் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்டு பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, மரக்கறிகள் மற்றும் பழங்களை தொடடரூந்தில் கொண்டு செல்லும் முறையை விரைவில் தயார் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: