தொகைமதிப்பு விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்தல் தொடர்பில் செயலமர்வு!

Thursday, November 10th, 2016

அரச மற்றும் அரச துறைசார்ந்த வேலைவாய்ப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை கணக்கெடுக்கும் செயற்பாடு தேசியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்கள கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஸவ்த்துல் கரிம் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச துறை சார் திணைக்களங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்களின் தகவல்களை கிரமமான முறையில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் துறைசார் நிறுவனங்களின் சம்பந்தபட்ட உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழிமூல விண்ணப்பபடிவங்களை எவ்வாறு முறையாக பூர்த்தி செய்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் இவ்விடயத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்ட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

9696817fc270a0fd634610c1720eb8b4_XL

Related posts: