தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/unnamed-7.jpg)
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை சனிக்கிழமை(14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் மண்பானை வியாபாரமும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. யாழ். திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் மண்பானைகள் குவியல் குவியலாகக் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பல்வேறு வகையான அளவுகளில் விற்பனையாகும் மண் பானைகளைப் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
தற்போது அலுமினியப் பானைகள் தாராளமாக விற்பனைக்கு வந்துள்ள போதிலும் மண்பானைகள் மூலம் பொங்கலிடுவதனால் நன்மைகள் பல எம்மைச் சேரும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த பிரஜைகளின் கருத்தாகும்.
Related posts:
புதிதாக சமுர்த்தி உதவி வழங்க நடவடிக்கை!
பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் த...
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க - சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு - இலங்கையின...
|
|