தைப்பொங்கல் தினத்தையொட்டிய கிளிநொச்சியில் வியாபாரம் களைகட்டியுள்ளது!

Saturday, January 13th, 2018

கிளிநொச்சியில்  தைப்பொங்கல் தினத்தையொட்டிய வியாபார நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. போருக்கு பின் 2010 ம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பு மக்கள் முன்னெடுக்கும் எட்டாவது தைப்பொங்கல் நிகழ்வு இதுவாகும்.

கடந்த எட்டு வருடங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிமட்ட வாழ்வாதார மேம்படுத்தல் நடவடிக்கைகளில் சில துளிகளே மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த எட்டு வருடங்களாக மக்கள் இன்னோரன்ன வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து  வருகின்றனர்

பல தேர்தல்களுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ள போதிலும் வாழ்வாதாரம்  மேம்படவில்லை என்ற ஏக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பு இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மக்கள் மக்கள் முகம் கொடுக்க தயாராகி வருகின்ற நிலையில் பல்வேறு துன்பங்களையும் சுமந்தவாறு 2018 ம் ஆண்டின் தைப்பொங்கல் கொண்டாட்ட முன்னெடுப்புக்களை மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: