தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

Friday, January 18th, 2019

தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கடலிலும் குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும் 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும் ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை திருகோணமலை, சங்கமித்தை கடற்கரையில் நேற்று முன்தினம் சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts: