தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி!

Friday, January 5th, 2018

எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு 2 இலட்சத்திற்கு அதிகமான தேங்காய்களை எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் நியாயவிலையில் விற்பனைசெய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது வேண்டுதலுக்கு அமைய இந்ததேங்காய்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தனதெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்திற்குட்பட்ட தோட்டங்களில் தைப்பொங்கலை முன்னிட்டு பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாகஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: