தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை!

Saturday, January 12th, 2019

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த விடுமுறை தினத்துக்கான மாற்றுப் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: