தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்: பாடசாலைகள் அனைத்தும் 6 ஆம் திகதி ஆரம்ப – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Wednesday, May 1st, 2019

அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாடசாலை நடைபெறும் தினங்களில் பாடசாலைக்கு அண்மையிலுள்ள பாதைகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன். ஆளில்லாத வாகனங்கள் இருந்தால், அவை வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும்.

போலியான தகவல்களை வழங்குபவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள். தற்பொழுதும் அவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: