தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்சரான காமினி லொகுகே தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் இருப்புகள் வழங்கப்பட்டால், இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு தற்போது கடுமையான டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், மின்வெட்டு அட்டவணையை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இந்தநிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 15 ஆயிரம் தொன் எரிபொருளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் மின் உற்பத்திக்கான நாளாந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 1500 தொன் எரிபொருள் தேவைப்படுகிறது. அதாவது 10 நாட்களுக்கு 15 ஆயிரம் தொன் போதுமானது.

இதேவேளை இம்மாதம் 22 ஆம் திகதிக்குள், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் உற்பத்தி இயந்திரங்களை மீண்டும் செயற்படுத்த முடியும் எனவும், இதன் மூலம் மேலும் 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: