தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை – மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்நடைந்தது!

இலங்கைக்கு மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார் .
மேலும் எரிவாயு நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறதோடு, நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும், ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|