தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் வலியுறுத்து!

Friday, December 24th, 2021

மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சிக்காது அந்த திட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினருடன் இணைந்து சேவைகளை முன்னெடுத்தால் பிரதேச மக்களின் நலன்களை ஓரளவேனும் நிறைவு செய்து கொடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் – ஜீவா தெரிவித்துள்ளார்.

வலி தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் சபையின் உறுப்பிர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

காழ்ப்பணர்ச்சிகளால் ஒருவரை அல்லது அவரது மக்கள் பணிகளை குற்றம் கூறிக்கொண்டிராது அதன் உண்மைகளை கண்டறிய வேண்டும்.

கடந்த காலங்களில் எம்மீது பூசப்பட்ட சேறடிப்பகள் பல இன்று யாரால் மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மை நீதிமன்றத்தினூடாக நிரூபிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் தேவையற்ற விடயங்களை சபையில் கூறிக்கொண்டிருப்பதை விடுத்து எமது பிரதேச மக்களின் எமது பிரதேசத்தின் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு எமது சபையின் வரையறைக்கு அப்பாற் சொல்லாது முன்னெடுப்பதே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார்

Related posts: