தேவையற்ற போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக செயற்படும் !

Saturday, July 29th, 2017

தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி வேறு அரசியல் காரணங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக செயற்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் தினைகளத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேவையற்ற போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டில் அமுலில் உள்ள அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதற்காகவே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளதாகவும் அதற்கமைய பொது மக்களின் சொத்துக்களை பாதுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: