தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது – தோழர் ஜீவன்!

Monday, January 15th, 2018

தேர்தல் காலங்களில் தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.  ஆனால் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் தமது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அத்தகையவர்களால் எமது மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைப்பதும் இல்லை கிடைக்கப் போவதுமில்லை என்று  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்தகாலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது சக தமிழ் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாந்து எமது மக்கள் அவர்களை தேர்தல்களில் வெற்றிபெறச் செய்தார்கள். அவ்வாறு தேர்தல்களில் வெற்றிபெற்றுச் சென்றவர்கள் வாக்களித்த மக்களை மறந்து தமது சுயலாபங்களை மட்டுமே முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

முழுமையான அரசியல் அதிகாரங்களை எமது மக்கள் எமக்கு வழங்கியிருப்பார்களேயானால் பிரதேச சபைகளையும் மாகாண சபையையும் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் பெற்று நாம் யாரும் எதிர்பாராத பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருப்போம்

மக்கள் தாம் வாழும் கிராமத்தை முன்னேற்றவேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வதனூடாகவே அது சாத்தியமாகும் என சுட்டிக்காட்டுகின்றோம்.

நாம் மக்களிடம் நியாயமான நடைமுறைச் சாத்திமான விடயங்களையே தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டு அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் அவ்வாறுதான் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றோம்.

உங்கள் அதரவுடன் இந்த பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றி நிச்சயம் இந்த பகுதியை அபிவிருத்தியால் தூக்கிநிறுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: