தேர்தல் வாக்காளர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீடு!

Saturday, August 11th, 2018

இந்த ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதில் பெயர் அல்லது முகவரி போன்ற விடயங்கள் தொடர்பில் சரியான தகவல் இல்லை என்றால் அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: