தேர்தல் முறைமை திருத்தம் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அமைச்சர் பசில்மற்றும் ஹக்கீம் ஆகியோர் இணைப்பு!

Thursday, September 23rd, 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த தெரிவுக்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தெரிவுக்குழுவானது அதன் தலைவர், அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்று பிற்பகல் கூடியிருந்தது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அபே ஜனபலவேகய கட்சிகள் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான தமது யோசனைகளை முன்வைத்ததாக சபைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: