தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை!

Friday, December 15th, 2017

கலாசார நிகழ்வுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டது.

விசேடமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொலித்தீனைப் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய தரத்துடன் பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளாதவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தரமற்ற பொலித்தீன் உற்பத்திகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் லால் தர்மப்பிரிய சுட்டிக்காட்டினார்.

Related posts: