தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021

2020 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பக் காலம் முடிவடைந்துள்ளது என்றாலும், வன்னி தேர்தல் பிரிவில் வசிக்காத காரணத்தினால் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய நேற்று நடந்த சந்திப்பின் போது குறித்த வாக்காளர்களுக்கு தங்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்குவதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எனினும், அவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே முன்பு பதிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டுக்கான அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களையும், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத மதிப்பெண்களையும் வர்த்தமானிய அறிவித்தலில் தனித்தனியாக வெளியிட தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

00

Related posts: