தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது – மஹிந்த தேசப்பிரிய!

Sunday, January 22nd, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பது பற்றி உறுதிபட கூற முடியாது.

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.2012ம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மீளவும் அவை நாடாளுமன்றில் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mahinda-Deshapriya-720x450-720x450

Related posts: