தேர்தல் தொகுதி மீள்நிர்ணயத்துக்கான விசேட ஆணைக்குழு அடுத்த வாரம் நியமனம்!
Saturday, September 30th, 2017மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியான புதிய தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்று எதிர்வரும் 02ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஐந்து பேர் கொண்ட குறித்த இந்த குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி பெயரிடுவார். ஏற்கனவே தேசிய எல்லை மீள்நிர்ணயக் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 3 பேர் இந்த விசேட குழுவிற்கு உள்வாங்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி, தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ் 50:50 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலதிக ஆசிரியர்களின் சம்பளத்திற்காக 100 கோடி செலவு!
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஒப்பந்த விபரம் வெளியானது.!
பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
|
|