தேர்தல் தினத்தன்று முப்படைகளும் பணியில்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தினத்தன்று முப்படைகளையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடத்திலிருந்து 400 மீற்றருக்கு அப்பால் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றும் இதன்போது தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசிகளை பயன்படுத்துவது வாக்குச்சீட்டுக்களை ஒளிப்படம் எடுப்பது மற்றும் வாக்காளர்களை திசைதிருப்ப முயற்சிப்பது உள்ளிட்டசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|