தேர்தல் செலவுகளை பத்து பில்லியனிற்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி – மகிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளை முடிந்தளவு குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் சவால்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளை பத்து பில்லியனிற்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் தேர்தல்செலவுகள் 7 பில்லியனாக காணப்படும் என மதிப்பிடப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் தற்போதுபத்து பில்லியன் என மதிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகளை முடிந்தளவிற்கு குறைப்பதற்கு ஆணைக்குழு முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுகாதார பணியாளர்களிற்கு பாதுகாப்பு கவசஙகளை வழங்கவேண்டியுள்ளதாலும் தேர்தல் ஒத்திகைகளை நடத்தவேண்டியுள்ளதாலும் செலவினை கட்டுப்படுத்துவது கடினமானதாக காணப்படுகின்றது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையகத்தில் தற்போது 90 முழுநேரபணியாளர்களும் 60 பகுதி நேர பணியாளர்களும் உள்ளனர் நாளாந்தம் அவர்களிற்கு முகக்கவசத்தை வழங்கவேண்டியுள்ளது இது தவிர ஏனைய பாதுகாப்பு உபகரணங்கள் பொருட்கள் போன்றனவும் தேவைப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|