தேர்தல் சுமுகமாக முடிந்தததற்கான காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Tuesday, February 13th, 2018

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமுகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர் இனிவரும் காலங்களிலும் இவ்வாறு சுமுகமான முறையில் நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு தமக்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.

Related posts: