தேர்தல் சட்டம் மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!

தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேட்ப்பு மனுத்தாக்கல் செய்தல் நேற்றைய தினம் அரம்பமாகியுள்ளது.
இதனால் தேர்தல் பிரச்சார ஊர்வலங்கள் பேரணிகள் வாகனத்தொடரணிகள் என்பன ஊடாக பிரச்சாரம் மேற்கொள்வது முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கிகளைக் கொண்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது முற்று ழுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கியைக்கொண்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தச்சட்டங்களை மீறிச் செயற்படுவோரை கைது செய்யவும் நடவெடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைக்குறிப்பிட்டார்.
கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்த முடியும். எனவும் அதற்கு குறித்த பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
Related posts:
|
|