தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தடை!
Wednesday, January 31st, 2018தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொழிற்சங்கங்களைக் கேட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மூன்று வருடங்களின் பின்னர் நடைபெறுவதால் அதில் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதுதொழிற்சங்கங்களின் பொறுப்பு அல்ல என்று தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சு கஜநாயக்கதெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமற்றதென பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
குறைந்த விலையில் புதியரக வாகனம்!
குடாநாட்டில் நிலவும் நீர்தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
மின்வெட்டு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!
|
|