தேர்தல் காரணமாக தடைப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான இடமாற்றம் தேர்தலின்பின் உடன் அமுலுக்கு வரும் – பிரதித் தலைமைச் செயலர்!

உள்ளூராட்சி தேர்தல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண அரச அலுவலர்களுக்கான இடமாற்றம் தேர்தலின்பின் உடன் அமுலுக்கு வரும் என வடக்கு மாகாணப் பிரதி தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய மாகாண இணைந்த சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்ளைகள் யாவும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பிற்போடப்படுகின்றது. மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அவை உடன் அமுலுக்கு வரும்.
மேற்படி அறிவிப்பு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். வடக்கில் அரச திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மருத்துவப் பணியாளர்கள் தொடக்கம் சாதாரண தொழிலாளர்கள் வரையில் அனைவருக்கும் இந்த நியமனம் தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|