தேர்தல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருடாந்த இடமாற்றம் இன்றுமுதல் நடைமுறையில்!

உள்ளுராட்சித் தேர்தல் காரணமாக இடைநிறத்தி வைக்கப்பட்டிருந்த அரச அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இன்று முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் கடிதங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது .
இடமாற்றல் விடுவிப்பு கடிதங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நிறுவனத் தலைவர்களால் வழங்கப்பட்டு அவற்றின் பிரதிகள் இடமாற்றல் செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவிலந்த இடமாற்றல்கள் உள்@ராட்சி சபைகளின் தேர்தலுக்காக இரு மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த மாதம் 10ஆம் அரசியல் அமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை!
பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!
யாழ் வருகிறார் பிரதமர்!
|
|