தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிப்பு!
Sunday, February 19th, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, அஞ்சல்மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழிக்காட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆலோசனை வழிக்காட்டி, நேற்றையதினம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் மாவட்ட பிரதி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையதினம்முதல் வழமையான அலுவலக கடமை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!
முகக்கவசங்களை பயன்படுத்திய பின் எரித்து விடுங்கள் : பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்து!
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...
|
|