தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு – தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2019ஆம் ஆண்டுக்காக வழங்க வேண்டிய கணக்காய்வு அறிக்கைகளை இதுவரை வழங்காத 4 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் இந்த அறிக்கையை குறித்த நான்கு கட்சிகளும் சமர்ப்பிக்கத் தவறினால் உரிய கட்சிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்படும் என்றுமு; தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர் மத, இன அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படவிருக்கிறது. இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடடத்தக்கது.

Related posts: